மீரா மிதுணை சோகத்தில் ஆழ்த்திய நிகழ்வு.! வருத்தத்தில் போட்ட ட்வீட்.!  - Seithipunal
Seithipunal


மாடல் அழகியாக இருந்த மீரா மிதுன் 'தானா சேர்ந்த கூட்டம்' என்ற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் நுழைந்தவர். அதன்பின்னர் அழகிப் போட்டி நடத்துவதாக மோசடி செய்தார் என்கிற சர்ச்சையில் சிக்கினார் அவர். 

பிக்பாஸ் சீசன்-3 யில் போட்டியாளராக உள்ளே நுழையும் வாய்ப்பு மீராமீதுணுக்கு கிடைத்தது. ஆனால், பிக்பாஸ் வீட்டில் இருந்த யாருடனும் இவருக்கு ஒத்துப்போகவில்லை. இதனால், வெகுவிரைவில் அங்கிருந்து வெளியேறினார்.

இந்த நிலையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'நம்ம வீட்டு பிள்ளை' படத்தில் தான் நடித்திருந்த காட்சிகள் மற்றும் ஒரு பாடல் காட்சி ஆகியவை பிக்பாஸ் நிகழ்ச்சியில் தான் கலந்து கொண்ட ஒரே காரணத்திற்காக படத்திலிருந்து நீக்கப்பட்டன என்று கூறி சமீபத்தில் தன்னுடைய வருத்தத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

விஜய் ஆண்டனி, அருண் விஜய் இருவரும் இணைந்து நடித்து வரும் 'அக்னிச் சிறகுகள்' என்ற படத்தில் இருந்தும் தன்னை நீக்கிவிட்டார் என்று தெரிவித்துள்ளார் மீரா மிதுன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

meera mithun was sad


கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
கருத்துக் கணிப்பு

சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு...
Seithipunal