பலரின் முகத்திரை கிழிக்கப்படும்., நடிகை மீரா மிதுன் வெளியிட்ட புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


தமிழில் ஒரு சில படங்களில் நடித்த நடிகை மீரா மிதுன், கடந்த பிக் பாஸ் சீசன் கலந்துகொண்டு தமிழகம் முழுவதும் பிரபலம் அடைந்தார். அதன்பின் ஒருசில அரசியல் கருத்துகளை கூறி சர்ச்சைகளில் சிக்கியவர். பின்னர் சமூக வலைத்தளத்தில் தனது புகைப்படங்கள் மற்றும் சர்ச்சையான கருத்துக்களால் தொடர்ந்து தனது பேசப்பட்டு வருகிறார்.

நடிகர் ரஜினி, சூர்யா, நடிகை திரிஷா உள்ளிட்டோர் பற்றி சில கருத்துக்களை பதிவிடவே, அவருக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். அதிலும் குறிப்பாக நடிகர் விஜய் பற்றி அவர் கூறிய கருத்துக்கு, நெட்டிசன்கள் அவரை சின்னாபின்னம் ஆக்கினர் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு அவருக்கு கண்டனங்கள் எழுந்தது.

இந்நிலையில் நடிகை மீரா மிதுன், "மீரா எனும் தமிழ்ச்செல்வி" என்ற புதிய படத்தை இயக்குவதாக அறிவித்துள்ளார். இந்த திரைப்படம் மூலம் தான் ஒரு பிரபலம் என சொல்லிக்கொள்ளும் பலரின் முகத்திரைகள் கிழிக்கப்படும். உண்மை ஒருபோதும் தோற்பதில்லை என்றும் நடிகை மீரா மிதுன் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்தின் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளார். அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

meera mithun new movie


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->