லவ் டுடே பிரதீப்பின் அடுத்த படம்.. வெளியான சூப்பர் தகவல்.! - Seithipunal
Seithipunal


‘கோமாளி’ புகழ் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், ஏஜிஎஸ் தயாரிப்பில் உருவாகிய திரைப்படம் லவ் டுடே.  இந்தத் திரைப்படத்தில் நாயகனாகவும் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் அறிமுகமாகியுள்ளார். பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக 'நாச்சியார்' படத்தில் நடித்த இவானா நடித்துள்ளார். 

காதல், காமெடி, பொழுதுபோக்கு என்று 2 கிட்ஸ் விரும்பும் படமாக வந்துள்ள இந்த ‘லவ் டுடே’ திரைப்படத்தில், நடிகர் சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு உள்ளிட்டவர்களும் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கடந்த அக்டோபர் 4ம் தேதி வெளியான திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று நல்ல வசூலை பெற்று வருகிறது. குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்த படம் இதுவரை இப்படம் ரூ.70 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

இந்த நிலையில், அடுத்ததாக லவ் டுடே பிரதீப் இயக்கவுள்ள புதிய திரைப்படத்தையும் இயற்கை அவரே நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தத் திரைப்படத்தையும் ஏஜிஎஸ் சினிமா தான் தயாரிக்க உள்ளதாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Love today pradeep again join with ags Cinema 


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->