படுக்கை அறை காட்சிகளுக்கு ஓகே.. லவ் டுடே பட நாயகி ஓபன் டாக்.! - Seithipunal
Seithipunal


லவ் டுடே நாயகி இவானா கேரளாவில் "ஆளுவா" என்ற ஊரில் பிறந்து வளர்ந்தவர். இவர் முதன் முதலில் நடித்த படம் மலையாள படம் "அனுராக்கா கரிக்கின் வெல்லம்" என்ற மலையாள படத்தில் அறிமுகமானார்.

 இவர் தமிழ் சினிமாவிற்கு 2018 ஆம் வருடம் இயக்குனர் பாலாவின் திரைப்படமான நாச்சியார் என்னும் திரைப்படத்தில் அறிமுகம் ஆனார். மேலும் 2019ல் மதி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆனால் இந்த படம் அவருக்கு பெரிய வெற்றியை பெற்று தரவில்லை.

 இதனால் இவானா என்ற நடிகை பற்றி யாருக்கும் தெரியவில்லை. அதன் பின் 2022 பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த "லவ் டுடே" படத்தில்  நிகிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த லவ் டுடே படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது. இந்தப் படம் தமிழ் மற்றும் ஆந்திராவில் வசூல் சாதனை படைத்தது. இதன் மூலம் இவருக்கு பல ரசிகர்கள் உள்ளனர். 

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சியில் பேட்டி கொடுத்த இவனா, கூறியதாவது லவ் டுடே படத்தில் படுக்கை அறை காட்சிகள் இருப்பதாக கூறினார்கள், இதை என்னுடைய வீட்டில் இருப்பவர்களுக்கு எப்படி தெரியப்படுத்துவது என்று எனக்கு தயக்கமாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும், எப்படியோ ஒரு வழியாக வீட்டில் கூறியதாகவும் ,ஆனால் அவர்களுடைய வீட்டில் உள்ளவர்கள் அவரை புரிந்து கொண்டு  கதைக்கு தேவைப்பட்டால் தாராளமாக நடிக்கலாம் என்று தைரியம் மூட்டியதாகவும்,  மேலும் என்னுடைய வீட்டில் என் மீது நம்பிக்கை வைத்துஎன்னை நடிப்பதற்கு எந்த கண்டிஷன்ங்களும் போடவில்லை என்றும், அவர்கள் ஒத்துழைப்பு அளித்ததால் நானும் நல்ல முறையில் நடத்து உள்ளேன் என்றும் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Love today actress ok for bed room scenes


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->