"காதலுக்கு மரியாதை" கொடுத்தார்களா கவினும் லாஸ்லியாவும்?..! அறிவுரையாவது........!! - Seithipunal
Seithipunal


பிக் பாஸ் வீட்டில் லாஸ்லியாவின் அப்பா வந்து சென்ற பிறகு கவின்., லாஸ்லியா நடந்து கொண்டதைப் பார்க்கும் போது காதலுக்கு மரியாதை காட்சி தான் நினைவுக்கு வருகிறது.

பிக் பாஸ் சீசன் 3 ஆரம்பம் முதலே கலர்புல்லாகவும், யூத்புல்லாகவும் இருக்க கவினும், லாஸ்லியாவும் ஒரு காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாத ஒரு உண்மை.

முதலில் நன்றாக சென்று கொண்டிருந்த காதல், இடையில் 'கவின் - லாஸ்லியா காதலைப் பிரிக்க சேரப்பா கேம் ஆடுகிறார்' என்னும் பேச்சு வரவே இருவருக்கும் நடுவே விரிசல் விட தொடங்கியது. 

அடுத்த ஓரிரு நாட்கள் லாஸ்லியாவையும், கவினையும் கமலும் கண்டித்தார். ஆனால் அவர்கள் யார் பேச்சையும் கேட்காமல் அவர்கள் செய்வதை தான் செய்து கொண்டிருந்தார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் பிக் பாஸ் வீட்டிற்கு வந்த லாஸ்லியா அப்பா, அவரை கடுமையாக திட்டினார். இதை தொடர்ந்து வேறு வழியே இல்லாமல் தனது காதலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்தார் லாஸ்லியா.  

பிக் பாஸில் கவின் - லாஸ்லியா பிரிந்த இந்த காட்சிகளைப் பார்க்கும் போது, தமிழ் திரைப்படமான காதலுக்கு மரியாதை விஜய், ஷாலினி தான் நம் நினைவிற்கு வருகிறார்கள். அந்த படத்திலும் பெற்றோருக்காக அவர்கள் தங்களது காதலை விட்டுக் கொடுத்து விடுவார்கள். ஆனால், இறுதியில் இரண்டு குடும்பமும் சேர்ந்து அவர்களை மீண்டும் சேர்த்து வைப்பார்கள்.

அந்த படத்தை போல நிஜத்திலும் கவின் -லாஸ்லியா காதலும் முடிய வேண்டும் என்பது தான் அவர்களது ரசிகர்களின் ஆசை. ஏற்கனவே வெளியில் ஏகப்பட்ட பிரச்சினைகளில் கவின் சிக்கியுள்ளார். எனவே இனியாவது பிக் பாஸ் வீட்டில் தன் பெயரைக் கெடுத்துக் கொள்ளாமல் லாஸ்லியாவும், கவினும் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

losliya kavin gives respect to the love or not


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->