லோகேஷ் கனகராஜிக்கு காயம்! பின்னணியில் ரசிகர்களா? - Seithipunal
Seithipunal


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் கடந்த வியாழன் அன்று வெளியானது. இந்த திரைப்படம் உலக முழுவதும் 6000 திரையரங்கில் வெளியாகி கலமையான விமர்சனங்களை பெற்றது. 

இந்த படம் முதல் நாள் ரூ.148.5 கோடி வசூலித்து திரை உலகை அதிர வைத்தது. இந்த வருடம் வெளியான இந்திய படங்களில் அதிகமான முதல் நாள் வசூல் என்ற சாதனையை இந்த திரைப்படம் பெற்றுள்ளது. 

மேலும் முதல் 4 நாட்களில் ரூ. 404 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களை காண கேரளா பாலக்கோட்டில் உள்ள திரையரங்கம் ஒன்றிற்கு சென்றார். 

அப்போது ரசிகர்கள் லோகேஷ் கனகராஜை பார்ப்பதற்காக சூழ்ந்ததால் பரபரப்பில் லோகேஷுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. 

இது தொடர்பாக இயக்குனர் லோகேஷ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது, 'இந்த அன்பிற்கும் நெகிழ்ச்சிக்கும் மிக்க நன்றி கேரளா. 

உங்களை பாலக்கோட்டில் சந்தித்ததில் மகிழ்ச்சி. கூட்ட நெரிசலில் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. அதனால் மற்ற இடங்களுக்கும் பத்திரிக்கையாளர்கள் சந்திப்புக்கும் செல்ல முடியவில்லை. 

விரைவில் கண்டிப்பாக மீண்டும் கேரளா வருவேன். அதுவரை இந்த அன்புடன் லியோவை கொண்டாடுங்கள்' என குறிப்பிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lokesh Kanagaraj Leo


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->