வெற்றி விழா கொண்டாட்டத்தில் 'லியோ': பாதுகாப்பு கோரி கடிதம்! எப்போது தெரியுமா? - Seithipunal
Seithipunal


லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் கடந்த 19ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் இடையே கலவையான விமர்சனங்களை பெற்றது. 

அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் லலித்குமார் தயாரித்துள்ளார். 

அனிருத் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் 7 நாட்களில் ரூ. 461 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. 

இந்நிலையில் இந்த படத்தின் வெற்றி விழா குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன் படி இந்த படத்தின் வெற்றி விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் வருகின்ற நவம்பர் 1ஆம் தேதி நடைபெற உள்ளது. 

இந்த விழாவில் நடிகர் விஜய் கலந்து கொள்வதால் பாதுகாப்பு கோரி காவல்துறைக்கு இந்த படத்தின் தயாரிப்பாளர் கடிதம் கொடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Leo success meet update


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->