லெஜண்ட் சரவணாவுக்கு பில்டப் கொடுக்கும் விஜய் டிவி பிரபலங்கள்.! இது உங்களுக்கே ஓவரா இல்லையா.? - Seithipunal
Seithipunal


சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரான சரவணன் அருள் நடித்துள்ள திரைப்படத்தின் ஆடியோ லாஞ்ச் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் இருக்கும் பிரபல துணிக்கடைகளில் ஒன்றுதான் சரவணா ஸ்டோர்ஸ். இதன் உரிமையாளர்களில் ஒருவரான சரவணன் அருள் நடித்துள்ள திரைப்படம் தான் தி லெஜன்ட். இந்த படத்தில் சரவணன் அருளுக்கு ஜோடியாக முன்னணி நடிகர்கள் பலரையும் நடிக்க வைக்க அவர் முயற்சித்தார்.

ஆனால் தமிழ் நடிகைகள் எவருமே மார்க்கெட் போய் விடும் என்ற பயத்தில் இந்த படத்தில் கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன் என்று நோ சொல்லி விட்டனர். பின்னர் பாலிவுட் கவர்ச்சி குயின் ஊர்வசி ரௌடெல இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

சரவணன் அருள் ஹீரோவாக நடித்துள்ள தி லெஜன்ட் திரைப்படம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் pan-india படமாக வெளியாகிறது. வரும் ஜூலை 28 ம் தேதி இந்த படம் வெளியாவுள்ள நிலையில் தற்போது இந்த படத்தின் ஆடியோ லாஞ்ச் வரும் ஜூலை 24-ல்  நடைபெற உள்ளதாக ப்ரோமோ வெளியாகியுள்ளது.

இந்த ப்ரோமோவில் விஜய் டிவி பிரபலங்கள் லெஜண்ட் சரவணாவுக்கு ஓவர் பில்டப் கொடுக்க, இதை கண்ட இணையவாசிகள் இது உங்களுக்கே ஓவரா இல்லையா என்று கேள்வி கேட்டு கமெண்ட் போட்டு  வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

legand saravana movie audio launch date announcement


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->