சினிமாவில் அரசியலையும் திணித்துள்ளாரா கமல்?! ஒற்றைக் ட்வீட்டால் ஏற்பட்ட சர்ச்சை.! - Seithipunal
Seithipunal


இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவான திரைப்படம் விக்ரம். இந்த படத்தில் விஜய்சேதுபதி, பகத் பாசில், ஷிவானி உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்தத் திரைப்படம் ஜூன் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் அனைத்து பாடல்களும் வருகிற மே 15ஆம் தேதி அன்று வெளியாகவுள்ளது.

இந்நிலையில், நேற்று கமலின் விக்ரம் திரைப்படத்தின் முதல் சிங்கிளான பத்தல பத்தல என்ற பாடல் வெளியாகி 8 மில்லியன் பார்வையாளர்களை பெற்று இருக்கிறது. இத்தகைய நிலையில், இந்த பாடல் குறித்து நடிகை கஸ்தூரி ட்வீட் செய்துள்ளது வைரலாகி வருகிறது.

அவரது ட்வீட்டில்"'சகலகலாவல்லவன்+மார்க்கண்டேயன் = கமல், வானதி அம்மையாரிடம் தோத்த காண்டு மொத்தத்தையும் lyricsல இறக்கிட்டாப்ல. ஒன்றியம் ங்குற ஒத்தை வார்த்தையில தன் மொத்த அரசியலையும் சுருக்கிட்டாப்ல. கூட்டணி ஆட்சியில இல்லைனாலும் படக்காட்சியில வந்துருச்சு! " என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kasthuri tweet about pathala pathala song 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->