கர்ணன் படத்தின் புதிய பாடல் வெளியீடு.! பட்டையை கிளப்புது ட்யூன்.! - Seithipunal
Seithipunal


இயக்குனர் மாரிசெல்வராஜ் கர்ணன் திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரஜிஷா விஜயன் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் நடிகர் யோகிபாபு மற்றும் சிலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். 

வரும் ஏப்ரல் 9ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் கண்டா வரச்சொல்லுங்க பாடல் வெளியாகியது. தொடர்ந்து மூன்றாவது நாளாக இந்த பாடல் நம்பர் ஒன் ட்ரெண்டிங்கில் இருந்தது.

பாடல் வரிகளை மாரி செல்வராஜ் எழுதியுள்ளார். சந்தோஷ் நாராயணன் மற்றும் கிடக்குழி மாரியம்மாள் இருவரும் இந்த, :கண்டா வரச்சொல்லுங்க" பாடலை பாடியுள்ளனர். சமீபத்தில் வெளியான இந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.

இத்தகைய சூழலில், இந்த பாடல் பல்வேறு தரப்பினரும் விரும்பும் விதமாக இருப்பதால், ரசிகர்கள் அனைவரும் தங்களது தலைவர்கள், பிடித்த கிரிக்கெட் வீரர்கள், பிடித்த நடிகர்களுக்கு பொருத்தி பார்த்து ஆனந்தம் அடைகின்றனர். தற்போது இந்த பாடல் யூடியூபில் 6 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், கர்ணன் படத்தின் புதிய பாடல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karnan pandarathi song viral


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->