ஆக்ரோஷமாக மிரட்டும் ரிஷப் ஷெட்டி: வைரலாகும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்! - Seithipunal
Seithipunal


கடந்த ஆண்டு மிகச் சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக அளவில் வசூலை குவித்த கன்னட திரைப்படம் 'காந்தாரா'. இந்த திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்டம் மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டு வசூலை குவித்தது. 

ரூ. 8 கோடி செலவில் தயாரான இந்த திரைப்படம் ரூ.400 கோடிக்கும் மேல் வசூலித்தது. இந்த திரைப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி கதாநாயகனாக நடித்திருந்தார். 

இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தயாரிப்பாளர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த திரைப்படத்திற்கு 'காந்தாரா- ஏ லெஜண்ட் பாகம் 1' என தலைப்பு வைத்துள்ளதாகவும் இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் எனவும் சமீபத்தில் படக்குழு அறிவித்திருந்தது. 

அதன்படி, இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வீடியோ இன்று வெளியாகி உள்ளது. ஆக்ரோஷமான நிலையில் ரிஷப் ஷெட்டி இருக்கும் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kantara chapter 1 update


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->