சந்திரமுகி 2  நாயகிக்கு இவ்வளவு கஷ்டமா?.. அவரே பகிர்ந்து கொண்ட தகவல்! - Seithipunal
Seithipunal


பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கணா ரனாவத்  இவர் தமிழில் தாம் தூம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்  அதனைத் தொடர்ந்து ஜெயலலிதாவின்  பயோபிக் திரைப்படமான தலைவி திரைப்படத்தில் நடித்திருந்தார்.

 2005 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற சந்திரமுகி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகிக் கொண்டிருக்கிறது அந்தத் திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் க்கு ஜோடியாக நடிக்கிறார் கங்கனா. இத்திரைப்படத்தை தொடர்ந்து இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து  எமர்ஜென்சி என்ற திரைப்படத்தை இவரே தயாரிக்கிறார்.

இது பற்றி தனது பேட்டியில் தெரிவித்த அவர் மும்பைக்கு வரும்போது வெறும் 500 ரூபாய் உடன் தான் வந்தேன். நான் தயாரித்து நடிக்கும் எமர்ஜென்சி படம் தோல்வியை தழுவினால் மீண்டும் அதே நிலைமைக்கு தள்ளப்படுவேன் என தெரிவித்திருக்கிறார். இவர் நன்றாக சமைக்க கூடியவராம் அதனால் மும்பை வந்த புதிதில் ஹோட்டல் ஆரம்பிக்கலாம் எனவும் நினைத்துள்ளார். போதிய பணம் இல்லாததால் ஹோட்டல் ஆரம்பிக்க முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் இவரது நடிப்பில் வெளியான டாக்கட்  என்ற திரைப்படம்  85 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டது. ஆனால் இந்தத் திரைப்படம் வெறும் 2.5 கோடி மட்டுமே வசூல் செய்து மிகப்பெரிய தோல்வியை அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kangana ranaut shares her tough times during an interview


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் லியோ திரைப்படம் எப்படி இருக்கு? உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் லியோ திரைப்படம் எப்படி இருக்கு? உங்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?
Seithipunal
-->