எம்.ஜி.ஆருக்கே அதை சொல்லிக் கொடுத்தவர் கமல்ஹாசன்.. பல ஆண்டுகளுக்கு பின் வெளியான வியத்தகு தகவல்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் நடிப்பின் உச்சமாக இருந்த சிவாஜி, எம்.ஜி.ஆர், எம்.ஆர் ராதா போன்றவர்களின் நடிப்பை கொண்டாடிய காலகட்டத்தில் குழந்தையிருந்து நடிக்க தொடங்கியவர் கமலஹாசன். 1960 ஆம் வருடத்திலிருந்து நடிக்க தொடங்கி இன்றுவரை நடிகர், பாடகர், நடன கலைஞர், தயாரிப்பாளர் என பல்வேறு துறைகளிலும் தன் திறமையை காட்டிவருகிறார்.

மேலும், கமலஹாசனின் நடிப்பு திறமையை நடிகர் திலகம் சிவாஜியே பாராட்டியுள்ளார். தேசிய விருது, பத்ம பூசன், பத்ம ஸ்ரீ விருதுகள், பிலிம் பேர் விருது என பல விருதுகளை பெற்றிருக்கிறார். ரஜினிகாந்த் திரைத்துறையில் அறிமுகமாவதற்கு முன்பே கமலஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகாகி தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை பிடித்துள்ளார்.

இவ்வாறாக சினிமாவின் நடிப்பு, பாடல், தயாரிப்பு என ஒவ்வொன்றும் கற்று தேர்ந்த கமல்ஹாசன் சிறு வயதிலிருந்தே நடனத்திலும் ஆர்வமாக கற்றுக்கொண்டார். அப்போது இருந்த தங்கப்பன் எனும் நடன மாஸ்டரிடம் அசிஸ்டெண்ட்டாக இணைந்து நடனத்தை கற்றுகொண்டு பல படங்களுக்கு நடன கலைஞராக பணியாற்றிருக்கிறார்.

இதன்படி, 1971 ஆம் வருடம் எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான  நீரும் நெருப்பும் திரைபடத்திற்கு கமல்ஹாசனின் நடனஆசிரியர்  தங்கப்பன் தான் நடன மாஸ்டராக இருந்திருக்கிறார். அப்போது இவரின் உதவியாளரான கமல்ஹாசன் எம்.ஜி.ஆர் க்கு நடனமாட சொல்லி குடுத்திருக்கிறார். இவ்வாறு சினிமாவில் அனைத்து துறையில் வல்லவராக இருப்பதாலேயே கமல்ஹாசனை உலக நாயகன் என்று அன்போடு ரசிகர்கள் அழைத்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kamala Teaches Dance To MGR


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->