அவர் மேல தான் காஜலுக்கு க்ரஷ்ஷாம்- சுவாரஸ்ய வீடியோ உள்ளே.!  - Seithipunal
Seithipunal


பிரபல நடிகை காஜல் அகர்வால் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட திரை உலகில் முக்கிய நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். சமீபத்தில் இவர் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். 

அதன் பின்னரும் காஜல் அகர்வால் சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் உருவாகிய நான்கு திரைப்படங்கள் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இத்தகைய சூழலில், நடிகை காஜல்அகர்வால் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடித்து இருந்த லைவ் டெலிகாஸ்ட் என்ற தொடர் கடந்த 12ஆம் தேதி ஹாட்ஸ்டார்-ல் வெளியாகியது. 

இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை காஜல் அகர்வால் பல்வேறு விஷயங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார். அப்போது, அவரிடம் தமிழ்த் திரையில் உங்களுடைய யார் மீது என்ற கேள்விக்கு பதில் அளித்தார். 

அதில் அஜித் மற்றும் விஜய் என்று இரண்டு பேரை காஜல் குறிப்பிட ஒருவரைத்தான் சொல்ல வேண்டும் என்று தொகுப்பாளர் வலியுறுத்தியவுடன் விஜய்தான் என்று காஜல் பதிலளித்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kajal recent speech about vijay


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->