விபத்தினால், காஜல் அகர்வால் எடுத்த முடிவு..! அதிர்ச்சியில் படக்குழுவினர்.! - Seithipunal
Seithipunal


இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் நடிகர் கமலஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையை அடுத்த பூந்தமல்லியில் ஈவிபி சினிமா படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது.

இந்த படப்பிடிப்புக்கு நேற்று முன்தினம் செட் அமைக்கும் பணியின் போது, கிரேன் அறுந்து விழுந்ததில் 3 ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது சோகத்தை ஏற்படுத்தியது. அதேபோல இந்த விபத்தில்படுகாயம் அடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்ற இந்த கோர விபத்தை கண்ட நடிகை காஜல் அகர்வால் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி உள்ளார். மூன்று பேரின் உயிரானது இவரது கண் முன்னே போயுள்ளது இவருக்கு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இது மட்டுமல்லாது இவர்கள் மூவரும் காஜல் அகர்வாலிடம் பேசிக்கொண்டிருந்து சில நிமிடங்களில் பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்துள்ளனர்‌. இதனால் வீட்டிற்கு சென்ற காஜல் அகர்வால் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்து வருகிறார். மேலும், ஒரு வாரத்திற்கு படப்பிடிப்பிற்கு வர இயலாது என்றும் கூறியுள்ளார். இதனால் படக்குழு இவர் மீது கோபத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KAJAL AGARWAL TAKE LEAVE FROM INDHIYAN 2 MOVIE


கருத்துக் கணிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள்
கருத்துக் கணிப்பு

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள்
Seithipunal