புஷ்பா 2 படத்தில் குத்தாட்டம் போடும் முன்னணி நடிகை.. யார் தெரியுமா.? - Seithipunal
Seithipunal


புஷ்பா இரண்டாம் பாகத்தில் நடிகை காஜல் அகர்வால் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்த திரைப்படம் தான் புஷ்பா. இதில் பகத் பாசில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்தப் படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கிய நிலையில், படம் வெளியாகி பயங்கர வரவேற்ப்பை பெற்றது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உட்பட ஐந்து மொழிகளில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகிய திரைப்படம் தான் புஷ்பா. மேலும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீபிரசாத் இசை அமைத்திருந்தார்.

இந்த படத்தில் 'ஊ சொல்றியா' பாடல் வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது. இதில், நடிகை சமந்தா ஒரு ஐட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட்டு பட்டி தொட்டி எங்கும் கலக்கினார். 

இந்த நிலையில் புஷ்பா 2 படத்திலும் ஒரு குத்துப்பாட்டு இடம்பெற உள்ளதாகவும், அந்த பாடலுக்கு நடிகை காஜல் அகர்வால் நடமாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kajal Agarwal folk dance in pushpa 2


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->