ஜோதிகாவின் 50-வது படம்.. உடன்பிறப்பே படத்திற்காக பீச்சில் ரசிகர் செய்த செயல்.!  - Seithipunal
Seithipunal


நடிகை ஜோதிகா நடிப்பில், சமுத்திரக்கனி சசிகுமார் ஆகியோர் இணைந்து நடித்த திரைப்படம் தான் உடன்பிறப்பே. இந்த திரைப்படம் அமேசான் ப்ரைம் இல் வெளியாகி இருக்கிறது. மேலும் தெலுங்கு ரசிகர்களுக்காக ரக்தா சம்பந்தம் என்ற பெயரில் இந்த திரைப்படம் வெளியாகியிருக்கிறது.

இரு உடன்பிறப்புகளுக்கு இடையே உள்ள நெருக்கமான அன்பை வெளிப்படுத்தும் விதமாக இந்த திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்த படம் ஜோதிகாவின் 50வது திரைப்படம் ஆகும். படம் வெளியாகி ரசிகர்களிடம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது. 

இந்த நிலையில் தற்போது ஜோதிகாவின் 50-வது திரைப்படத்தை சிறப்பிக்கும் விதமாக அவரது ரசிகர் ஒருவர் மெரினா கடற்கரையில் கலங்கரை விளக்கத்திற்கு அருகே காமராஜர் சிலைக்கு பின்புறம் மணல் சிற்பம் அமைத்துள்ளார். 

இது கடற்கரையில் வரும் பார்வையாளர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. தற்போது இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து பலரிடமும் பாராட்டை பெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jyothika udanpirappe movie statue in marina beach


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கஞ்சா விற்பனை., தமிழக அரசின் நடவடிக்கை.!Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கஞ்சா விற்பனை., தமிழக அரசின் நடவடிக்கை.!
Seithipunal