''ஜாக்சன் துரை இரண்டாம் அத்தியாயம்'' - ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட படக்குழு! - Seithipunal
Seithipunal


நடிகர் சத்யராஜ் மற்றும அவரது மகன் சிபிராஜ் நடிப்பில் தயாராகி வரும் 'ஜாக்சன் துரை இரண்டாம் அத்தியாயம்' என்ற படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு சத்யராஜ், சிபிராஜ், பிந்து மாதவி நடிப்பில் வெளியான படம், 'ஜாக்சன் துரை'. இந்த படத்தை பி.வி.தரணிதரன் இயக்கியிருந்தார். 

தற்போது இந்தப் படத்தின் 2ம் பாகம் உருவாகி வருகிறது. ஸ்ரீ கிரீன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் ஐ ட்ரீம் ஸ்டூடியோஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது.

சத்யராஜ், சிபிராஜுடன் சம்யுக்தா, மனிஷா ஐயர், சரத் ரவி உள்ளிட்டோர் நடிக்கும் இந்த படத்துக்கு சித்தார்த் விபின் இசையமைக்கிறார். கல்யாண் வெங்கட்ராமன் ஒளிப்பதிவு செய்கிறார். 

இந்த கதை 1940-ல் ஊட்டி அருகிலுள்ள கிராமம் ஒன்றின் பின்னணியில் எடுக்கப்படுகிறது. பிரிட்டிஷ் காலக்கட்டத்தில் பயன்படுத்தப்பட்டப் பொருட்கள் மற்றும் கட்டிடங்கள் போல் செட் அமைத்து படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

''ஜாக்சன் துரை இரண்டாம் அத்தியாயம்'' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ள நிலையில், இந்த படம் முந்தைய பாகத்தின் தொடர்ச்சியா அல்லது வேறு கதைக்களமா? என்பது குறித்து படக்குழு தெரிவிக்கவில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jackson Durai episode 2 team released the first look poster


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->