கோடைகேற்ற சுவையான தயிர் லஸ்ஸி.. இதோ ரெசிபி.! - Seithipunal
Seithipunal


கோடைகாலத்தில் சாப்பிட வேண்டிய குளு குளு தயிர் லஸ்ஸி.!

பால், தயிர், மோர், நெய்... போன்ற பால் பொருட்கள் எல்லாம் நமக்கு புதிதல்ல. அதிலும், வெயில்காலத்துக்கு ஏற்ற மிக அருமையான வயிற்றுக்கு இதமான குளு குளு ஜூஸ் என்றால் லஸ்ஸி தான்...

லஸ்ஸி என்கிற பெயர் மட்டும்தான் தமிழ் அல்ல. மற்றபடி, தயிரில் சர்க்கரை சேர்த்து தயாரிக்கப்படும் இதன் செய்முறையை முயன்று, ருசி பார்க்காதவர்களே இருக்க மாட்டார்கள். 

கோடைகாலத்தில் ஒரு பாரம்பரிய பானமாக நாம் லஸ்ஸியை அருந்துகிறோம். ஆனால் அவை பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது என உங்களுக்கு தெரியுமா? 

பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை கொண்ட குளு குளு தயிர் லஸ்ஸி ஈசியாக செய்வது எப்படி? வாங்க பார்க்கலாம்.!

தேவையான பொருட்கள் :

தயிர் - ஒரு கப்

சர்க்கரை - தேவையான அளவு

பாதாம் - 3

முந்திரி - 3

ஐஸ் கட்டிகள் - 3 

செய்முறை :

முதலில் மிக்ஸியில் தயிர் மற்றும் சர்க்கரை சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். 

பிறகு பாதாம் மற்றும் முந்திரியை சிறிய துண்டாக நறுக்கி கொள்ள வேண்டும். 

அடுத்து ஒரு டம்ளரில் அரைத்த வைத்துள்ள கலவையை போட்டு பாதாம், முந்திரியை சேர்த்து ஐஸ் கட்டிகளைக் போட்டால் குளு குளு தயிர் லஸ்ஸி ரெடி... சுவைத்து பார்க்கலாம் வாங்க...!!

குறிப்பு :

ஸ்வீட் லஸ்ஸி, கற்பூர லஸ்ஸோ, ஏலக்காய் லஸ்ஸி, ரோஸ் மில்க் லஸ்ஸி, பைனாப்பிள் லஸ்ஸி, மேங்கோ லஸ்ஸி, வெள்ளரிக்காய் லஸ்ஸி இது போல் நீங்கள் விரும்பும் பழம் என்ன வேண்டுமானாலும் சேர்த்து லஸ்ஸி செய்யலாம்.

நன்மைகள் :

தயிரை கொண்டு தயாரிக்கப்படும் லஸ்ஸியானது செரிமான சக்திக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

லஸ்ஸி உடலில் நல்ல பாக்டீரியாக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது. மேலும் கெட்ட பாக்டீரியாக்களின் வளர்ச்சியை இது குறைக்கிறது.

உடலில் உள்ள கெட்ட கொழுப்பை அளவிட உதவும் புரோபயாடிக்குகளை இது கொண்டுள்ளது. இதனால் நமது உடலின் ஒட்டு மொத்த நன்மைக்கும் இது உதவுகிறது.

லஸ்ஸி குளிர்ச்சியான மற்றும் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும் ஒரு பானம் ஆகும். இது உடலின் வெப்பத்தை குறைக்க உதவுகிறது. மேலும் இது எலக்ட்ரோலைட்டுகளை அதிகம் கொண்டுள்ளது. 

கால்சியம், எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்து என்பது பலரும் அறிந்த விஷயமே. இதனால் எலும்பு வலுவாக இருப்பதற்கு லஸ்ஸி உதவுகிறது.

லஸ்ஸியில் காணப்படும் லாக்டிக் அமிலம் சருமத்தில் ஏற்படும் கறைகளை நீக்குகிறது. மேலும் இது சரும அமைப்பை மேம்படுத்தவும், சருமம் அழகாகவும் மற்றும் இளமையாகவும் இருக்க உதவுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How To prepare Chil lesy in tamil


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->