சூர்யாவின் பின்னணியில் இருப்பது யார்?! வெளியான தகவல்.!  - Seithipunal
Seithipunal


இன்று திருப்பூர் பெருமாநல்லூர் இந்து முன்னணி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், மாநிலத்தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கலந்து கொண்டு அதன் பின்னர் செய்தியாளர்களிடம் உரையாற்றினார். 

அப்போது தமிழகத்தில், "கோவில் நிலங்களை அரசியல்வாதிகளும், அரசாங்கமும் ஆக்கிரமிப்பு செய்கின்றன. இதனை கண்டித்து நவம்பர் 1ஆம் தேதி பொதுமக்கள் திரளாக கூடி பெரிய அளவில் போராட்டம் நடத்த இருக்கின்றோம். கோவில் நிலங்கள் இந்துக்களுக்கு பயன்படவேண்டும். 

இந்துக்களுக்கு பயன்படுத்த தான் கோவில் நிலங்களை மன்னர்கள் அளித்துள்ளனர். தமிழகத்தில் திமுகவாக இருந்தாலும் சரி, அதிமுக வாக இருந்தாலும் சரி இந்து விரோத அரசகத்தான் அவர்கள் இருக்கின்றனர். இந்துக்கள் குறித்து அவர்கள் கவலைப்படுவதில்லை. வாக்கு வங்கி அரசியலை தான் மேற்கொள்கின்றனர். 

சட்டப்பேரவைத் தேர்தலில் இந்து முன்னணி போட்டியிடாது. ஆனால், யாருக்கு வெற்றி என்பதை நாங்கள் முடிவு செய்வோம். நடிகர் சூர்யாவின் பின்னணியில் ஏதோ ஒரு பயங்கரவாத சக்தி இருக்கிறது என்றுதான் இந்து முன்னணி கருதுகிறது. சூர்யா அதிலிருந்து விடுபட வேண்டும்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

hindu munnani speech about surya


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->