2023-ல் அதிக வசூலை குவித்த தமிழ்த் திரைப்படங்கள்..! இதோ ஒரு பார்வை.! - Seithipunal
Seithipunal


இந்த 2023-ம் ஆண்டு தமிழ் சினிமாவுக்கு ஒரு வெற்றிகரமான ஆண்டாக அமைந்தது. ஏனென்றால், தமிழில் வெளியான ஏராளமான திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிசில் வசூலை வாரிக்குவித்தன. இந்த நிலையில் இந்த ஆண்டில் அதிக வசூலை குவித்த தமிழ்த் திரைப்படங்களின் தொகுப்பை காண்போம்.

1. லியோ:

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த அக்டோபர் மாதம் 19-ந்தேதி வெளியான திரைப்படம் 'லியோ'. இந்த படத்தில் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், கவுதம் வாசுதேவ் மேனன், மிஸ்கின், மடோனா செபாஸ்டியன், பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியான இந்தத் திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்றது. ஆனால், உலக அளவில் சுமார் ரூ.620 கோடிக்கும் மேல் வசூல் செய்து 2023-ல் அதிக வசூல் செய்த தமிழ்ப் படமாக உள்ளது. 

2. ஜெயிலர்:

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'ஜெயிலர்'. ரஜினிகாந்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்த இன்பத்தைப் படத்தில், மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, சுனில், விநாயகன், வசந்த் ரவி, யோகி பாபு, மிர்னா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. 

இந்த திரைப்படம் உலக அளவில் சுமார் ரூ.615 கோடிக்கு மேல் வசூலித்து 2023-ல் அதிக வசூல் செய்த இரண்டாவது தமிழ்ப் படமாக உள்ளது. இந்தத் திரைப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் காணலாம்.

3. பொன்னியின் செல்வன் பாகம் 2:

கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலை திரைப்படமாக்கியவர் இயக்குனர் மணிரத்னம். கடந்த ஆண்டு இந்தப் படத்தின் முதல் பாகம் வெளியான நிலையில், அதன் தொடர்ச்சியாக 'பொன்னியின் செல்வன்' பாகம் இரண்டு இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 28-ந்தேதி வெளியானது. 

இந்த படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி திரைப்பிரபலங்கள் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் உலக அளவில் சுமார் ரூ.350 கோடிக்கு மேல் வசூலித்து 2023-ம் ஆண்டின் மூன்றாவது அதிக வசூல் செய்த திரைப்படமாக உள்ளது. 

இதேபோல், வம்சி பைடிபள்ளி இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் வெளியான 'வாரிசு', இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'துணிவு', வெங்கி அட்லுரி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 'வாத்தி', இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா, ரிது வர்மா, சுனில், செல்வராகவன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான 'மார்க் ஆண்டனி', இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஜூலை 14-ந்தேதி வெளியான 'மாவீரன்', இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான 'மாமன்னன்', விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன் நடிப்பில் கடந்த ஜூன் 9-ம் தேதி வெளியான 'போர் தொழில்' உள்ளிட்ட திரைப்படங்கள் 2023-ம் ஆண்டு அதிக வசூல் செய்த படமாக உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

highest collection movie in tamil cinema 2023


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->