பிரபல நடிகையும், பிக் பாஸ் பிரபலமுமான பாஜக தலைவர் மாரடைப்பால் மரணம்.! - Seithipunal
Seithipunal


ஹரியாணா மாநிலத்தை சேர்ந்த பாஜக தலைவரும், இந்தி நடிகையுமான சோனாலி போகத் கோவாவில் மாரடைப்பால் காலமானார். 

கடந்த 2019 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்த முன்னாள் டிக்டாக் நட்சத்திரமான சோனாலி போகத் (41 வயது)  கோவாவில், நேற்று இரவு திடீரென உடல்நிலை காரணமாக மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால், மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியிலேயே சோனாலி போகத் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

வெளியான முதல்கட்ட தகவலின்படி, அவர் மாரடைப்பால் உயிரிழந்தார் என்று தெரிய வந்துள்ளது. அவரின் மரணத்தில் சந்தேகம் எழுந்த காரணத்தினால், தற்போது கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை நடத்தப்படுகிறது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Haryana BJP leader Hindi actress Sonali Phogat passed away


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->