ஹர்பஜன் சிங் படம் குறித்து அவர் மனைவி போட்ட ட்வீட்.! பதிலளித்த ஹர்பஜன் சிங்.!  - Seithipunal
Seithipunal


பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலமாக தமிழில் அறிமுகமானவர் லாஸ்லியா. இவர் இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண். தமிழில் இவர் அறிமுகமாகும் திரைப்படம் தான் பிரெண்ட்ஷிப். இந்த திரைப்படத்தில் அர்ஜுன், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஆகியோர் நடிக்கின்றனர்.

தமிழில் ட்வீட் செய்ததன் மூலமாக நிறைய தமிழ் ரசிகர்களை கொண்டிருப்பவர் தான் ஹர்பஜன்சிங். இப்போது அவர் தமிழ் திரைப் படத்தில் நடிக்கப் போகிறார்., என்பது அவருடைய ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 

இவருடைய பிரண்ட்ஷிப் திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகியது. இது குறித்து அவரின் மனைவி கீதா பஸ்ரா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், "இவர் கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்று அனைவரும் ஆசைப்படுகிறார்கள். உங்களுடைய இந்த பக்கத்தை நான் பார்ப்பேன் என்று நினைத்ததே இல்லை. திரைப்படத்தில் உங்களை காண ஆவலாக இருக்கிறேன்." என்று கூறியுள்ளார். 

இதற்கு ஹர்பஜன்சிங், "கதாநாயகியின் கணவர் கதாநாயகன் ஆவதற்கு அந்த வீட்டில்தான் பயிற்சியைத் தொடங்கினார்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

harbajan singh wife tweet about friendship movie


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->