சிக்கலாக கேள்வி கேட்ட செய்தியாளர்.. ஸ்மார்ட்டாக பதிலளித்த துணிவு பட இயக்குனர்.! - Seithipunal
Seithipunal


விஜய் நடிப்பில் தெலுங்கு இயக்குனரான வம்சி படிப்பள்ளி இயக்குகின்ற திரைப்படம் தான் வாரிசு. இதில், நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஸ்மிகா மந்தனா நடித்துள்ளார்.

மேலும், இதில் பிரபு, சம்யுக்தா, சரத்குமார், யோகி பாபு, ஷியாம் உள்ளிட்ட பலரும் நடித்து இருக்கின்றனர். இப்படத்திற்கு தமன் இசையமைக்கும் நிலையில் தில் ராஜு படத்தை தயாரிக்கின்றார்.  வாரிசு படம் வரும் பொங்கலுக்கு வெளியாக இருக்கின்றது.

அதே நாளில் அஜித்தின் துணிவு திரைப்படமும் வெளியாக இருக்கின்றது. இந்த படத்தை எச் வினோத் இயக்க.. போனி கபூர் தயாரிக்கிறார். சமீபத்தில் பேசிய போது வாரிசு பட தயாரிப்பாளர் சர்ச்சையாக பேசி பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகினார். அதுபோல துணிவு பட இயக்குனர் எச்.வினோத்திடம் எழுப்பப்பட்ட ஒரு சிக்கலான கேள்விக்கு ஸ்மார்ட்டாக பதில் அளித்துள்ளார்.

செய்தியாளர் ஒருவர் வினோத்திடம் நீங்கள் துணிவு படம் பார்ப்பீர்களா? வாரிசு படம் பார்ப்பீர்களா என்று கேள்வி எழுப்ப, அதற்கு பதில் அளித்த எச் வினோத், "துணிவு படம் நான் எடுத்தது. அதை ஏற்கனவே பலமுறை பார்த்து விட்டேன். எனவே நான் பார்க்காத வாரிசு படத்தை தான் பார்ப்பேன்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

H Vinoth about varisu and thunivu release


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->