மாமாக்குட்டின்னா தான் பிடிக்கும்.. லவ் டுடே மேடையில் ஜி.பி.முத்து கலகலப்பு.!  - Seithipunal
Seithipunal


'கோமாளி' பட புகழ் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், ஏஜிஎஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லவ் டுடே.  இந்தத் திரைப்படத்தில் நாயகனாகவும் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் அறிமுகமாகியுள்ளார். 

பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக 'நாச்சியார்' படத்தில் நடித்த இவானா நடித்துள்ளார். காதல், காமெடி, பொழுதுபோக்கு என்று 2 கிட்ஸ் விரும்பும் படமாக வந்துள்ள இந்த ‘லவ் டுடே’ திரைப்படத்தில், நடிகர் சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு உள்ளிட்டவர்களும் முக்கிய வேடங்களிலும் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் 4ம் தேதி வெளியான திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று நல்ல வசூலை பெற்று வருகிறது. குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்த படம் இதுவரை இப்படம் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. 

இத்தகைய நிலையில், இந்த திரைப்படத்தின் 100வது நாள் வெற்றிவிழாவை படக்குழு நடத்தி இருக்கின்றது. அந்த நிகழ்ச்சியில் கலந்த கொண்ட யூட்யூப் பிரபலம் ஜி.பி.முத்து பேசியபோது, " என்னை இந்த திரைப்பட ப்ரோமோஷனுக்கு கூப்பிட்டாங்க. ஆனா, நான் ரொம்ப யோசிச்சன். நீங்க வந்து லெட்டர் படிச்சா மட்டும் போதும்னு சொன்னாங்க. லவ் டுடே படத்தில வந்த எனக்கு மாமா குட்டி கேரக்டர் தான் எனக்கு ரொம்ப புடிச்சிருந்துச்சு. நான் ரிவியூ பண்ண முதல் படம் லவ் டுடே தான்" என பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

GP Muthu about love today movie


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->