கவுண்டம்பாளையம் திரைப்படம்! திரையிடப்படும் திரையரங்குக்கு போலீசார் பாதுகாப்பு! - Seithipunal
Seithipunal


கவுண்டம்பாளையம் திரைப்படம் திரையிடப்படும் திரையரங்குக்கு போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழில் மறுமலர்ச்சி, பாண்டவர் பூமி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகர் ரஞ்சித். அவருக்கு சரியாக பட வாய்ப்பு கிடைத்ததால் சின்னத்திரை தொடர்களில் தொடர்ச்சியாக நடித்து வந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் ரஞ்சித் கவுண்டம்பாளையம் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி பெரும் சாட்சியை கிளப்பியது. குறிப்பிட்ட ஒரு சமூகத்தையும் குறிப்பிட்ட ஒரு அரசியலைக் கட்சித் தலைவரையும் இழிவுபடுத்து  வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக பெரும் சர்ச்சை கிளம்பியது.

இந்த நிலையில், கடந்த ஜூலை ஐந்தாம் தேதி படம் வெளியாகும் என்ற படகுழு அறிவித்து நிலையில் திடீரென படம் தள்ளி போக உள்ளதாக தெரிவித்தது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஞ்சித் தெரிவித்ததாவது, கவுண்டம்பாளையம் திரைப்படம் யாருக்கும் எதிரான படம் அல்ல.

கவுண்டம்பாளையம் திரைப்படத்தை திரையங்குகளில் திரையிட்டால் தியேட்டரை கொளுத்துவோம், தியேட்டரை சேதப்படுத்துவோம், தியேட்டரை முன் போராட்டம் நடத்துவோம் என்ற குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சி பிரமுகர்கள் திரையரங்கு உரிமையாளர்களுக்கு மிரட்டல் கொடுத்துள்ளனர். இதனால் பல்வேறு திரையரங்க உரிமையாளர்கள் கவுண்டம்பாளையம் திரைப்படத்தை திரையிட முன் வரவில்லை என்று நடிகர் ரஞ்சித் குற்றம் சாட்டினார்.

அதனைத் தொடர்ந்து நடிகர் ரஞ்சித் மற்றும் கவுண்டம்பாளையம் படத்தின் தயாரிப்பாளர் பழனிச்சாமி ஆகியோர் கவுண்டம்பாளையம் திரையிடப்படும் தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க விட வேண்டும்  நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு மீதான விசாரணை இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது, எந்த திரையரங்கு உரிமையாளர்களும் இதுவரை காவல்துறையிடம் புகார் அளிக்கவில்லை. மனுதாரருக்கு எந்த திரையரங்கிற்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடவில்லை. 15 திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்குவது இயலாது என்று தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, எந்தெந்த திரையரங்குகளில் பாதுகாப்பு தேவை என்பது சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் பட குழு மனு அளிக்கும் பட்சத்தில் அந்த திரையரங்குக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Goundampalayam film team files a petition police security should be provided to the theatre


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->