அட்ரா சக்கை! வாரிசுகளை களமிறக்கி அரசியல் படம்! "கவுண்டர் கிங்" கவுண்டமணி! - Seithipunal
Seithipunal


வயசானாலும் உன் ஸ்டைல் இன்னும் உன்ன விட்டு போகல என படையப்பா படத்தில் ரஜினியை சொல்வது போல வயதானாலும் நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் நக்கலும், நையாண்டியும் இன்றளவும் குறைந்தபாடில்லை. தமிழ் சினிமாவில் 80,90 காலக்கட்டத்தில் காமெடி நடிகராக கொடிகட்டி பறந்த கவுண்டமணி 2கே கிட்ஸ் காலத்திலும் தனது புகழை நிலைநாட்டியுள்ளார். இவருடைய நக்கலும், நையாண்டியும், கிண்டலும் தற்போது வரை பல மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு வர பிரசாதமாக அமைந்துள்ளது. இதனால் இவரை தமிழ் சினிமா உலகின் காமெடி லெஜெண்ட் என்று கூறினாலும் மிகையாகாது.

நடிகர் கவுண்டமணி, நடிகர் செந்திலுடன் இணைந்து நடித்த படங்கள் வசூலை வாரி குவித்துள்ளன. குறிப்பாக மேட்டுக்குடி, கரகாட்டக்காரன், உள்ளத்தை அள்ளித்தா, மன்னன், இந்தியன், நடிகன், சின்னக் கவுண்டர் உள்ளிட்ட படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. 

நகைச்சுவை நடிகர் கவுண்டமணி கடைசியாக கதாநாயகனாக நடித்த படம் 49 ஓ. அதன் பிறகு வயது முதிர்வு காரணமாக தமிழ் சினிமாவுக்கு ஓய்வு கொடுத்திருந்த காமெடி கிங் கவுண்டமணி தற்பொழுது மீண்டும் தனது நக்கல் பேச்சுக்களால் தமிழ் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுக்க உள்ளார்.

இயக்குனர் சாய் ராஜகோபால் இயக்கத்தில் ஷஷி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் "ஒத்த ஓட்டு முத்தையா" என்ற முழு நீள காமெடி திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்ற அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், தம்பி ராமையா, மாரிமுத்து, சிங்கம் புலி, ரவிமரியா, வையாபுரி, முத்துக்காளை, 'எதிர்நீச்சல்' ஜான்சி ராணி, தாரணி, கூல் சுரேஷ், சென்றாயன், லேகா ஶ்ரீ, டி.கே. ஶ்ரீநிவாசன், சதீஷ் உள்ளிட்ட காமெடி நடிகர் பட்டாளமே களம் இறங்குகிறது.

அதேபோன்று நடிகர் சிங்கமுத்து மகன் வாசன் கார்த்திக், மறைந்த நடிகர் நாகேஷின் பேரன் கஜேஷ், மற்றும் நடிகர் மயில்சாமி மகன் அன்பு மயில்சாமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். காமெடி கிங் கவுண்டமணிக்கு ஜோடியாக ராஜேஸ்வரி நடிக்க உள்ளார்.

இந்த படம் குறித்து பேசிய இயக்குநர் சாய் ராஜகோபால் "ஒத்த ஓட்டு முத்தையா படத்தின் கதையை கவுண்டமணி அவர்களிடம் சொன்னதும் மகிழ்ச்சியுடன் நடிப்பதற்கு உடனே சம்மதம் தெரிவித்தார். இந்த திரைப்படம் அனைவரும் ரசிக்கக்கூடிய வகையில் அரசியல் கலந்த முழுநீள நகைச்சுவை திரைப்படமாக இருக்கும். இந்த படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் தங்களது பேராதரவை வழங்குவார்கள் என நம்புகிறேன்" தெரிவித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு காமெடி நடிகர் கவுண்டமணி மீண்டும் நகைச்சுவை கலந்த அரசியல் படத்தில் நடிப்பது அவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Goundamani act lead role again in tamil comedy movie


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->