திருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்த பிரபல பெண் இயக்குனர்! - Seithipunal
Seithipunal


கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான '3' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். 

இதனை தொடர்ந்து 'வை ராஜா வை' படத்தையும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கினார். இந்த படத்தில் கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த் ஜோடியாக நடித்தனர். 

அதன் பிறகு ஐஸ்வர்யா 'பயணி' என்ற இசை வீடியோ ஆல்பத்தை இயக்கி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றார். தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'லால் சலாம்'. 

இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நடிகர் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். 

லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், திருவண்ணாமலை கோவில் சுற்றுவட்டார பாதையில் உள்ள குபேரலிங்க கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Famous female director darshan of Sami Tiruvannamalai


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->