சாக்கு மூட்டையில் பிணமாக கிடந்த பிரபல நடிகை.. அதிர்ச்சியில் திரையுலகம்.! - Seithipunal
Seithipunal


கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போன வங்காளதேசத்தின் பிரபல நடிகையான ரைமா இஸ்லாம் சாக்கு மூட்டையில் பிணமாக கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


வங்காளதேசத்தில் பார்டமன் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ரைமா இஸ்லாம். இவர் 25க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக காணாமல் போயுள்ளார். இதனைத் தொடர்ந்து இவரது கணவர் காவல் நிலையத்தில் தனது மனைவியை காணாவில்லை என புகார் அளித்துள்ளார்.

இந்த நிலையில் வங்காளதேச தலைநகர் டாக்காவின் புறநகர் பகுதியில் சாக்கு மூட்டையில் பிணமாக நடிகை ரைமா  கண்டெடுக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை பொதுமக்கள் போலீசாருக்கு கொடுத்துள்ளனர்.

இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் நடிகை ரைமா இஸ்லாமின் சடலத்தை கைப்பற்றி அவரது இறப்பு குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Famous actress lying dead in a sack


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->