டான் படம் ரிலீஸ் தேதி குறித்த தகவல்.! படக்குழுவின் முடிவென்ன.?! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான டாக்டர் திரைப்படம் நல்ல வெற்றியை பெற்றது. அடுத்ததாக இவர் நடித்துள்ள டான் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் படத்தின் போஸ்ட் மேக்கிங் பணிகள் சுறுசுறுப்பாக நடந்து வருகிறது.

சமீப்த்தில் இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. இந்த படமும் டாக்டர் படத்தை போலவே முழுக்க முழுக்க நகைச்சுவையை உள்ளடக்கியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லைக்கா நிறுவனமும் சிவகார்த்திகேயனும் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்க அனிருத் இசையமைக்கிறார். 

இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள்மோகன் நடிக்கிறார். மேலும் சமுத்திரகனி, எஸ் ஜே சூர்யா, சூரி, பால சரவணன், காளி வெங்கட் ஆகியோரும் நடித்துள்ளனர். 

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் புகைப்படங்களும் வெளியாகி கவனம் ஈர்த்தது. சிவகார்த்திகேயன் டப்பிங் பணிகளையும் முடித்துள்ளார். இந்த நிலையில், 'டான்' வரும் பிப்ரவரி 18 ஆம் தேதி தியேட்டர்களில் கொண்டுவர படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Don movie release update


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->