#Breaking: திமுக உடன்பிறப்புகளுக்கான முக்கிய அறிவிப்பு வெளியீடு.! தேதி குறித்த தலைமை.!  - Seithipunal
Seithipunal


திமுக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் தேர்தளுக்கான வேட்புமனு தாக்கல் வரும் அக்டோபர் 7ஆம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

திராவிட முன்னேற்றக் கழகத்தின் 15ஆவது பொதுத்தேர்தலில் புதியதாக பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட கூட்டம் 9-10-2022 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு சென்னை, அமைந்தகரை, பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள “செயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில்" நடைபெறுஉள்ளது. 

புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் தவறாமல் கலந்து கொள்ளும்படி துரைமுருகன் கேட்டுக் கொண்டுள்ளார். இதில் திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தான் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில், திமுக உடன்பிறப்புகள் மத்தியில் திமுகவின் தலைவர், பொதுச்செயலாளர், துணை பொதுச்செயலாளர், பொருளாளர் போன்ற உயர்மட்ட பதவிகளுக்கான வேட்புமனு தாக்கல் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு எகிரியுள்ள நிலையில் வரும் அக்டோபர் 7ஆம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், அக்டோபர் ஏழாம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேகமாக தலைமை கழகத்தில் பெற்றுக் கொள்ளப்படும் என்றும் இதற்கு கட்டணமாக ரூ.50,000 ரூபாய் அளித்து ரசீதை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk announced election of dmk admin election nomination date 


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->