சற்றுமுன் சேரனின் திருமணம்..!   - Seithipunal
Seithipunal


ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து,பாண்டவர் பூமி, பொற்காலம் உள்ளிட்ட காலத்தால் அழியாத தரமான படங்களை இயக்கியவர் சேரன். இவரது படங்களுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உண்டு.  இவர் கடந்த சில வருடங்களாக தனது சொந்த பிரச்னை காரணமாக  சினிமாவில் இருந்து விலகி இருந்தார். சேரன் இறுதியாக ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை என்ற படத்தை இயக்கி இருந்தார். 

இந்நிலையில் தம்பி ராமையாவின் மகன் உமாபதியை கதாநாயகனாக வைத்து  படம் ஒன்றை தற்போது இயக்கியுள்ளார். இந்த படத்தின் அறிவிப்பு விழா இன்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. 

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக  நடிகர் விஜய் சேதுபதி கலந்துகொண்டு படத்தின் தலைப்பை வெளியிட்டார். இப்படத்திற்கு "திருமணம் - சில திருத்தங்களுடன்" என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இதில் காவ்யா சுரேஷ் என்ற கதாநாயகி அறிமுகமாகிறார். மேலும் இந்த படத்தில் நடிகை சுகன்யா, எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா, பாலசரவணன், மனோபாலா உள்ளிட்டோருடன் சேரனும் நடித்துள்ளார். 

இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டது. அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் படம் வெளியாகும் என தகவல் கிடைத்துளளது.  தற்போது போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன என படக்குழு அறிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Director Cheran's Thirumanam


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->