மீண்டும் இணையும் தனுஷ்-ஐஸ்வர்யா! - Seithipunal
Seithipunal


இரு வீட்டாருக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் விவாகரத்து தள்ளி வைக்க முடிவு! 

நடிகர் ரஜினிகாந்த் அவர்களை மூத்த மகள் ஐஸ்வர்யா மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் கஸ்தூரி ராஜா அவர்களின் மகனமான தனுஷ் இருவருக்கும் திருமணமாகி 17 ஆண்டுகள் ஆனது. இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்த தம்பதியினர் பிரிவதாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்திருந்தனர். இருவரும் தங்களது சமூக வலைதளங்களில் இந்த அறிவிப்பினை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருந்தனர்.

இந்த செய்தி அவர்களின் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது. இவர்கள் இருவருக்கும் லிங்கா, யாத்ரா என்ற இரு மகன்கள் உள்ளனர். விவாகரத்து அறிவிக்கப்பட்ட பின்பு இருவரும் அவர்கள் வாழ்ந்து வந்த வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இருவரும் ஆரியபுரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்ததும் தெரிகிறது. விவாகரத்து அறிவிப்பு பின்னர் இருவரும் தங்கள் பெயர்களை சமூக வலைத்தளங்களில் மாற்றிக் கொண்டனர். 

சமீபத்தில் நடந்த அவர்கள் மகனின் பள்ளி விழாவில் இருவரும் சேர்ந்து கலந்து கொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு பேசும் பொருளானது. இன்னிலையில் கடந்த ஒரு மாதங்களாக இருவீட்டாரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்ததாக சொல்லப்படுகிறது.

அந்த பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்ததால் இருவரும் சேர்ந்து வாழ முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதைப் பற்றி அதிகாரப்பூர்வமாக இரு தரப்பும் தகவல் தெரிவிக்கவில்லை. தற்போதைக்கு விவாகரத்து செய்யாமல் ஒத்தி வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தையின் அதிகாரப்பூர்வ முடிவு வரும் நவம்பர் 18ஆம் தேதி தனுஷ்-ஐஸ்வர்யாவின் திருமண நாள் அன்று வெளியாக வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dhanush Aishwarya to reunite


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->