துரோகமா? கொலை மிரட்டல்! சிவகார்த்திகேயன் பாவம்!   - Seithipunal
Seithipunal


யூடியூப் சேனல் ஒன்றுக்கு இசையமைப்பாளர் டி. இமான் அளித்துள்ள பேட்டியில். ''சிவகார்த்திகேயனுடன் இந்த ஜென்மத்தில் இணைந்து மீண்டும் பணியாற்றுவது மிக கஷ்டம். 

அவரது படங்களில் வரும் காலங்களில் நான் பணியாற்ற மாட்டேன். எனக்கு அவர் மிகப்பெரிய துரோகத்தை செய்துள்ளார். 

அதை என்னால் வெளியே சொல்ல முடியாது. அப்படி நான் வெளியே சொன்னால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும். 

என் வாழ்க்கையில் வந்த துன்பங்களுக்கும் வலிகளுக்கும் முக்கிய காரணம் சிவகார்த்திகேயன் மட்டும்தான். அவருடன் நான் மிகவும் நெருக்கமாக பழகியதால் அவர் செய்த துரோகத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை'' என்று தெரிவித்திருந்தார்.

இமானின் இந்த பேட்டி தமிழ் திரை உலகில் மிகப்பெரிய புயலை கிளப்பியு இமானின் முதல் மனைவி மோனிகா ரிச்சர்ட் பிரபல வார இதழ் ஒன்றுக்கு அளித்திருக்கும் பேட்டி, இந்த விவகாரத்தில் மற்றொரு பக்கத்தை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது.

அவரின் அந்த பேட்டியில், "எங்களின் குடும்ப நண்பராக இருந்த சிவகார்த்திகேயன், நாங்க ஒற்றுமையா வாழணும், விவாகரத்து நடக்கக்கூடாதுன்னு சமாதான முயற்சியை மேற்கொண்டார்.

இமானின் விவாகரத்து முடிவுக்கு சிவகார்த்திகேயன் சப்போர்ட் பண்ணல. அது தன் இமானுக்குப் பிடிக்கல. அதை தான் இமான் துரோகம்னு சொல்லுறான்னு நான் நினைக்குறேன்.

ஒரு வருசத்துக்கு முன்னாடியே பொண்ணை ரெடி பண்ணிட்டுதான் இமான் எனக்கு விவாகரத்தே கொடுத்தார். நான் மறுப்பு தெரிவிச்சன். அரசியல்வாதிகளை வெச்சு 'உங்கப்பாவைக் கொன்னுடுவோம்'னு மிரட்டி  விவாகரத்து வாங்கினார்.

இமானுக்கு பட வாய்ப்பு இல்லைன்னு இப்படி பப்ளிசிட்டிக்கு பேசி இருக்காரு. என்னைவிட சிவாகார்த்திகேயனையும், அவரின் குடும்பத்தையும் அவரின் அந்த பேட்டி எவ்வளவு பாதிக்கும்னு நினைக்கும்போது, இப்படிப்பட்டவரோடு 12 வருஷம் வாழ்ந்து என வாழ்க்கையை வேஸ்ட் பண்ணிட்டேனேன்னு வருத்தப்படுறன். எங்களுக்கு நல்லது தான் நினைச்சாரு. சிவகார்த்திகேயன் பாவம். அவர் ரொம்ப டீசண்டான மனிதர்" என்று அந்த பேட்டியில் மோனிகா ரிச்சர் தெரிவித்துள்ளார்.

இவரின் பேட்டி வெளியானதற்கு பின் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் டி இமானை விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

D Iman SIvakarthikeyan issue


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->