கொரோனா குறித்து 2011 லேயே வெளிவந்த திரைப்படம்.! கண்முன்னே வந்து போகுதே.! - Seithipunal
Seithipunal


தற்பொழுது உலக நாடுகளையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் குறித்து 2011லேயே ஹாலிவுட்டில் ஒரு திரைப்படம் வந்திருக்கிறது என்றால் உங்களால் நம்பமுடிகிறதா.?

கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இது குறித்த சரியான விழிப்புணர்வு பலருக்கும் ஏற்படவில்லை. 

அரசாங்கம் எவ்வளவு தான் விளம்பரம் செய்தாலும், அந்த வைரஸின் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை இன்னமும் பலர் உணரவில்லை. எப்படி இவ்வளவு வேகமாக பரவுகிறது என்பது குறித்து 2011ஆம் ஆண்டு கோண்டஜியோன் என்ற திரைப்படம் வெளியாகியது. 

ஒரு கிளப்பில் சாதாரணமாக சீட்டு விளையாடிக் கொண்டிருந்த பெண்ணுக்கு விபரீத வைரஸ் ஒன்று பரவுகின்றது. அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

தொட்டாலே வைரஸ் பரவும் என்பதை கண்டறிந்த விஞ்ஞானிகள் அந்த பெண்ணோடு பழகியவர்களை தேடி கண்டுபிடித்து வருகின்றனர்.

கிளப்பில் இருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு பெண்ணுடன் இருந்தவர்களை பிடிக்க முயல அதற்குள் அவர்கள் மற்றவர்களுக்கு இந்த வைரசை பரப்பி விடுகின்றனர். 

இதுபோன்ற தொடர் தேடுதல் வேட்டையில் படம் நீளுகிறது. பின்னர், உலகம் முழுவதும் இந்த வைரஸ் பரவ ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. 

வீதிகளில் மக்கள் போராடுகின்றனர். இந்த வைரசை கட்டுக்குள் கொண்டுவர அரசாங்கம் என்ன செய்கிறது.? எப்படி உலகை காப்பாற்றினார்கள் என்பதை அந்தப் படத்தில் மிகவும் பரபரப்பாக தெரிவித்து இருக்கின்றனர். 

தற்போதைய நேரத்தில் அந்த contogion படம் அனைவரும் நிச்சயம் பார்க்க வேண்டிய படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Corona virus movie in 2011


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->