பெண் தொகுப்பாளரிடம் அத்துமீறிய கூல் சுரேஷ்! இணையத்தில் வைரலாகும் வீடியோ! - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகில் வில்லனாக வளம் வந்த மன்சூர் அலிகான் நடிப்பில் ஜெயக்குமார்.ஜே இயக்கத்தில் சரக்கு திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சரக்கு படக்குழுவினர் கலந்து கொண்ட நிலையில் நடிகர் கூல் சுரேஷ் மேடையில் ஏறினார்.

அங்கு அவருக்கு மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில் யாரும் எதிர்பார்க்காத விதமாக "எல்லோருக்கும் மாலை போடுறாங்க.. நமக்கு வித்தியாசமான வார்த்தைகளால் வரவேற்கும் ஒருவருக்கு போடறோமா? என பேசிக் கொண்டிருக்கும் போது அருகில் இருந்த நிகழ்ச்சி பெண் தொகுப்பாளுக்கு திடீரென மாலை போட்டு விட்டார். இந்த சம்பவம் அந்த நிகழ்ச்சியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த மன்சூர் அலிகானிடம் பத்திரிகையாளர்கள் இது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர் "கூல் சுரேஷ் செய்தது எனக்கே அதிர்ச்சியாக தான் இருந்தது. அவர் இப்படி செய்திருக்கக் கூடாது. அவர் சார்பாக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்திருந்தார். இந்த சம்பவம் குறித்து வீடியோ வெளியிட்டுள்ள கூல் சுரேஷ் "நேற்று நான் தொகுப்பாளிக்கு மாலை போட்டேன். அது போடக்கூடாதாம். அது தெரியாம போட்டுட்டேன். 

நான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் கலகலப்பாக இருக்க வேண்டும் என நினைப்பேன். அதுபோலத்தான் இதையும் செய்தேன். நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன்பு நானும் அந்த பொண்ணு டான்ஸ் ஆடினோம். அதைக் கண்டு நான் அந்தப் பெண் மிகவும் ஜோவியல் என நினைத்தேன். 

அதனால் காமெடிக்கு தான் இதை செய்தேன். அதற்கு அவர் ரியாக்ட் செய்வார் என நான் நினைக்கவில்லை. இதற்கும் மன்சூர் அலிகான் எந்த சம்பந்தமும் இல்லை. நான் செய்த செயல் ஒரு பெண்ணுக்கு தர்ம சங்கடமாக இருக்கும் என கொஞ்சமும் நினைக்கவில்லை. இதற்காக நான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" என விடியோ வெளியிட்டுள்ளார். கூல் சுரேஷ் அந்தப் பெண்ணுக்கு மாலை அணிவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CoolSuresh garlanding female host video viral on social media


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->