ஆட்டம் பாட்டத்துடன் ஆரம்பமான குக் வித் கோமாளி சீசன் 3.! வைரலாகும் ப்ரோமோ.! - Seithipunal
Seithipunal


விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது. அப்படி ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்த இந்த நிகழ்ச்சி இரண்டு சீசன்களில் முடிவடைந்துள்ள நிலையில் மூன்றாவது சீசன் எப்போது ஆரம்பிக்கும் என்று ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலரும் தற்போது நல்ல நிலையில் இருக்கின்றனர். வெள்ளித் திரையில் நடிக்க அவர்களுக்கு வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. அந்த வகையில் புகழ் மற்றும் அஸ்வின் ஆகியோர் இணைந்து என்ன சொல்லப் போகிறாய் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றனர்.

இதில், சிவாங்கியும் தற்போது நிறைய படங்களில் நடித்து வருகின்றார். அத்துடன் பவித்ரா லட்சுமி சதீஷ்க்கு ஜோடியாக நாய் சேகர் திரைப்படத்தில் நடிக்கிறார். மதுரை முத்து மற்றும் தீபா ஆகியோரும் நிறைய படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தர்ஷா குப்தாவும் தற்போது ஹீரோயினாக மோகன் ஜி யின் ருத்ரதாண்டவம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் அடுத்ததாக குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி எப்போது துவங்கும் என்று ரசிகர்களை ஏங்க வைத்துள்ள நிலையில் தற்போது குக் வித் கோமாளி 3 நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cook with comali 3 promo release


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->