திரைத்துறையில் சோகம்... நடிகை சுப்புலட்சுமி காலமானார்!
cinema actor subbulakshmi passed away
கேரளாவில் பிறந்த ஆர். சுப்புலட்சுமி அகில இந்திய வானொலியில் பணியாற்றி பல்வேறு இசை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார்.
இவர் திரைத்துறையில் டப்பிங் கலைஞராக தனது பயணத்தை தொடங்கி ஒரு சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
இவர் முதன் முறையாக மலையாள திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். பின்னர் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். குறிப்பாக தமிழில் விஜய்யின் பீஸ்ட், விண்ணை தாண்டி வருவாயா, ராமன் தேடிய சீதை உள்ள படங்களில் நடித்துள்ளார்.

மேலும் பல மொழி திரைப்படங்களிலும் தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். 87 வயதான இவர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சுப்புலட்சுமி பரிதாபமாக உயிரிலிருந்து விட்டார். இவரது மறைவு திரை துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவருக்கு பலரும் சமூக வலைதளங்களின் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
English Summary
cinema actor subbulakshmi passed away