ஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து.. பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி.! - Seithipunal
Seithipunal



ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட விபத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாலிவுட் சூப்பர் ஸ்டாரான நடிகர் அமிதாப் பச்சன் (வயது 80). இவர் தற்போதும் இளம் நடிகர்களுக்கு போட்டியாக திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிக்கும் 'ப்ராஜெக்ட் கே' என்ற படத்தில் அமிதாப் பச்சன் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சண்டைக் காட்சிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது நடிகர் அமிதாப்பச்சனுக்கு எதிர்பாராத விதமாக காயம் ஏற்பட்டது. இதில் அவருக்கு விலா எலும்பு பகுதியில் முடிவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், மருத்துவமனையில் நடிகர் அமிதாப் பச்சன் உடல்நிலை சீராக இருப்பதாகவும் தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bollywood super star Amitabh Bachchan injured in shooting spot and admitted hospital


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->