பிக்பாஸ் வீட்டில் கெத்தாக நுழைந்த ரம்யா கிருஷ்ணன்.! அறிமுகப்படுத்திய கமல்.! - Seithipunal
Seithipunal


பிக்பாஸ் நிகழ்ச்சி எந்த மொழியில் வெளியாகினாலும் அதற்கு அந்தந்த மொழிகளில் நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் நிறைய ரசிகர் கூட்டம் இருக்கிறது. அதனால்தான் வெற்றிகரமாக 4 சீசன் களை கடந்து பிக் பாஸ் 5 வது சீசனில் அடி எடுத்து வைத்துள்ளது. 

18 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது பல்வேறு எலிமினேஷன்கள் நடைபெற்றது. மேலும் வைல்டு கார்டு எண்ட்ரீயும் நடைபெற்று வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அபிஷேக் மீண்டும் நிகழ்ச்சிக்குள் வைல்ட் கார்டு மூலம் வந்துள்ளார். தற்போது நிகழ்ச்சியை சுவாரசியப்படுத்த சஞ்சீவ் வைல்ட் கார்ட் என்ட்ரி கொடுத்துள்ளார்.

கொரோனா காரணமாக நிகழ்ச்சியில் இருந்து கமல் விலகிய நிலையில் ரம்யாகிருஷ்ணன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவதாக தகவல் வெளியாகிய நிலையில் தற்போது கமல் மருத்துவமனையில் இருந்தவாறே வீடீயோ கான்பரன்ஸ் மூலம் அறிமுகப்படுத்த ரம்யா கிருஷ்ணன் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைகிறார். இந்த ப்ரோமோவை தற்போது விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Biggboss promo entry of Ramakrishnan


கருத்துக் கணிப்பு

தமிழக அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய.,Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய.,
Seithipunal