துவங்குகிறது.. பிக்பாஸ் சீசன் 6.. சிம்புவா.? கமலா.? தொகுப்பாளர் யார்.?!  - Seithipunal
Seithipunal


கோலிவுட் சின்னத்திரையில் மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த நிகழ்ச்சிதான் பிக் பாஸ். இது 5 எபிசோடுகளை கடந்து பிக் பாஸ் சமீபத்தில் பிக்பாஸ் அல்டிமேட் என்று புதிய எபிசோட் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. 

இந்த பிக்பாஸின் 5 எபிசோடுகளையும் மற்றும் பிக்பாஸ் அல்டிமேட்டின் முதல் எபிசோடையும் தொகுத்து வழங்கியவர் கமல்ஹாசன் தான். ஆனால், அவருக்கு படப்பிடிப்புகள் அழைத்த காரணத்தால் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை பாதியிலிருந்து சிம்பு தொடர்ந்தார். 

சிம்புவின் வருகைக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், அடுத்ததாக பிக்பாஸ் 6வது சீசன் குறித்த வேலைகள் ஆரம்பமாகி விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கான போட்டியாளர்களின் பட்டியலை பிக் பாஸ் குழு தயார் செய்து வருவதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவது சிம்புவா கமலா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதிகபட்சம் இந்த ஆறாவது சீசனை கமல்தான் தொகுத்து வழங்குவார் என்று உறுதியான தகவல் சின்னத்திரை வட்டாரத்தில் இருந்து வெளியாகி இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Biggboss 6 may starts Soon


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->