உலக விருது உன் வீட்டுக்கதவை தட்டும்.! தனுஷிற்கு வாழ்த்து மழை பொழிந்த பிரபலம்.!  - Seithipunal
Seithipunal


தன்னுடைய 38வது பிறந்தநாளை பிரபல நடிகர் தனுஷ் இன்று கொண்டாடுகிறார். அவருக்கு திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். ரசிகர்கள் அவரது பிறந்தநாளை முன்னிட்டு இணையத்தில் ஹேஷ் டேக் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 

இத்தகைய நிலையில், பிரபல இயக்குனர் பாரதிராஜா தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "திரையில் தோன்றுகின்ற ஒரு சில கதாபாத்திரங்களை நம்மை அறியாமல் நாம் உணர்வோடு, உணர்வாக பின்னப்பட்ட இருக்கும். 

இருப்பினும், இந்த கதாபாத்திரத்தில் நடித்த நடிகரின் நிஜ வாழ்க்கையில் அவரது குணநலன்கள் முற்றிலும் மாறுபட்டதாய் இருப்பதை கண்டு நமக்கு அதிர்ச்சி ஏற்படும். இது போன்ற விஷயத்தை நிஜவாழ்க்கையில் பிரதிபலிப்பவர் சிலர்தான். அதில் தனுஷ் முதன்மையானவர். 

தன்னடக்கம், எளிமை, அகந்தையின்மை, சிறந்த கலை, தொழில் நுட்ப அறிவு இது போதும். தனுஷின் வீட்டு கதவை உலக விருதுகள் வந்து தட்டும் வாழ்த்துக்கள்." என்று அவர் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Barathiraja Wishes To Dhanush birthday


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->