டிஆர்பி லிஸ்ட்டில் பழைய சீரியல்களை ஓரம்கட்டிவிட்டு கொடிகட்டி பறக்கும் புதிய சீரியல்கள்.!
barathi kannama top 2nd in tv serials trp
ஒவ்வொரு வாரமும் தொலைக்காட்சி சேனல்களில் அதிக டிஆர்பியை பெற்ற நிகழ்ச்சிகளின் பட்டியல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தும். இந்த லிஸ்டில் பெரும்பாலும் சீரியல்கள்தான் இடம்பெற்றிருக்கும். அதுபோல சன்டிவியின் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகின்ற திரைப்படமும் இந்த லிஸ்டில் இடம் பெறக்கூடும்.
இந்த வாரம் வெளியான லிஸ்டில் இதுவரை டாப் 5 இடங்களை பெற்றிருக்காத புதிய சீரியல்கள் இடம் பிடித்திருக்கின்றது. இதன் காரணமாக, பழைய சீரியல்கள் அனைத்தும் பின்னடைவை சந்தித்துள்ளது. இந்த வாரம் வெளியாகி இருக்கும் டிஆர்பி பட்டியலில் முதல் இடத்தை சன் டிவியில் கடந்த வாரம் ஒளிபரப்பான மருது திரைப்படம் பிடித்து இருக்கின்றது.
இந்தப் படத்தை விட்டுவிட்டு சீரியல்களின் டிஆர்பியை கையில் எடுத்து பார்த்தால் ரோஜா சீரியல் முதலிடத்தில் இருக்கின்றது. இரண்டாவது இடத்தில் பாரதிகண்ணம்மா சீரியலும், மூன்றாவது இடத்தில் பூவே உனக்காக மற்றும் நான்காம் இடத்தில் பாக்கியலட்சுமி இடம் பிடித்து இருக்கின்றது.
பூவே உனக்காக மற்றும் பாக்கியலட்சுமி போன்ற சீரியல்கள் புதிதாக தான் ஒளிபரப்பாகி வருகின்றது. கடந்த வார லிஸ்டில் பாரதிகண்ணம்மா முதலிடத்தில் இருந்தது. இந்த வாரம் ரோஜா சீரியல் முதலிடத்தை பிடித்து இருந்தாலும், கடந்த வாரம் ரோஜா சீரியல் இரண்டாம் இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.
ரோஜா மற்றும் கண்ணம்மாவுக்கு இடையே போட்டி நிலவி வருகின்றது. ஆனால், கொடிகட்டி பறந்த செம்பருத்தி சீரியல் டாப் 5 இல் ஒரு இடத்தில் கூட இடம் பிடிக்கவில்லை என்பது பார்வதி ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
barathi kannama top 2nd in tv serials trp