'அயலான்' படத்தில் சித்தார்த்! வைரலாகும் போஸ்டர்! - Seithipunal
Seithipunal


ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'அயலான்'. இந்த திரைப்படத்தில் ராகுல் பிரீத் சிங் கதாநாயகியாக நடித்துள்ளார். 

ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கும் இந்த படத்தை 24 மற்றும் கே ஜே ஆர் ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ளது. பான் இந்தியா படமாக வெளியாக உள்ள இந்த திரைப்படத்தில் 4000 மேற்பட்ட வி எஃப் எக்ஸ் காட்சிகள் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள் கொண்ட இந்திய சினிமாவின் முழு நீள லைஃப் ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ளது. 

தற்போது கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வரும் இந்த திரைப்படம் வருகின்ற 2024 பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 

இந்நிலையில் 'அயலான்' திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள ஏலியன் கதாபாத்திரத்திற்கு நடிகர் சித்தார்த் டப்பிங் பேசியுள்ளதாக படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளனர். இந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ayalaan movie update


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->