அல்லு அர்ஜுனை இயக்கப்போகும் விஜயின் ஆஸ்தான இயக்குனர்.! இது வேற லெவல் அப்டேட்.! - Seithipunal
Seithipunal


தென்னிந்திய சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் அட்லி. தமிழில் நயன்தாரா, ஆர்யா, ஜெய், நஸ்ரியா போன்ற முன்னணி பிரபலங்கள் நடித்திருந்த ராஜா ராணி திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதன் பின்னர் நடிகர் விஜய்யை வைத்து மெர்சல், தெறி, பிகில் போன்ற மூன்று திரைப்படங்களை இயக்கி வெற்றி கொடுத்தார். தற்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கானை வைத்து ஒரு படத்தை அட்லீ இயக்கி வருகிறார்.

அடுத்ததாக விஜயின் 60வது திரைப்படத்தை அட்லி இயக்க போவதாக கூறப்படுகிறது. இத்தகைய நிலையில், அட்லி ஷாருக்கான் திரைப்படத்திற்குப் பின் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து படம் இயக்க போகிறார். இந்த திரைப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மூன்று மொழிகளில் உருவாக போவதாக கூறப்படுகிறது. பிகில் படத்தை முடித்தவுடன் அல்லு அர்ஜுன்க்கு அட்லி கதை கூறியுள்ளதாகவும், இருவரும் மற்ற படங்களில் பிசியாக இருந்ததால் இனி தான் அந்த கதைக்கு வழி பிறக்கும் என்றும் கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Atlee may direct allu arjun


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->