'வணங்கான்' படத்தில் இருந்து சூர்யா பதிலாக இணைந்தவர் இவரா? வெளியான தகவல்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் எதற்கும் துணிந்தவன். இந்த படத்தை அடுத்து, கமலின் விக்ரம் படத்தில் அவர் ரோலக்ஸ் கேரக்டரில் நடித்திருந்தார்..

இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் வசூலில் சாதனை படைத்தது. விக்ரம் படத்தின் அடுத்த பாகத்தில் சூர்யா நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது அவர் இயக்குனர் பாலாவின் ''வணங்கான்'', இயக்குனர் வெற்றிமாறனுடன் ''வாடிவாசல்'' படத்தில் பிஸியாக நடித்து வருவதாக கூறப்படுகின்றது.

இதனிடையே 'வணங்கான் திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் சூர்யாவுக்கும் இயக்குனர் பாலாவிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் அதனால் படப்பிடிப்பை நிறுத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து வணங்கான் திரைப்படத்தில் இருந்து நடிகர் சூர்யா விலகியுள்ளதாக இயக்குனர் பாலா பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்த நிலையில் வணங்கான் திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு பதிலாக அருண் விஜய் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Arun Vijay act in vanangan movie


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->