தீவிர கிரிக்கெட் பயிற்சி.. அனுஸ்கா ஷர்மாவின் அதிரடி வீடியோ.! வியக்கும் விராட்.!  - Seithipunal
Seithipunal


பிரபல பாலிவுட் நடிகையாக இருக்கும் அனுஷ்கா சர்மா, கடந்த 2017-ல் தான் நீண்ட நாட்களாக காதலித்து வந்த இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் விராட் கோலியை திருமணம் செய்தார். 

திருமணத்திற்குப் பின்னர் அனுஷ்கா சர்மா விளம்பர படங்களில் நடித்து வந்தார். குழந்தை பிறந்தபின் எந்த படங்கள் மற்றும் விளம்பரப் படங்களிலும் நடிக்காமல் அனுஷ்கா சர்மா இருந்து வந்தார். இந்த நிலையில் நடிகை அனுஷ்கா சர்மா தற்போது இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜூலன் கோஸ்வாமியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. 

இந்த வீராங்கனை பத்மஸ்ரீ விருது மற்றும் அர்ஜூனா விருது உள்ளிட்டவைகளை பெற்றவராவார். இதற்காக அனுஷ்கா சர்மா தற்போது தீவிரமாக கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார். 

அவர் வெறித்தனமாக பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

anushka virat cricket training video viral


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->