'அந்த' திரைப்படத்தை மட்டும் 'மிஸ்' பண்ணிருந்தா... நவரச நாயகன் கார்த்திக் பற்றிய ஒரு சுவாரசியமான தகவல்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் கார்த்திக். இவர் பாரதிராஜா இயக்கிய அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இவரது தந்தை தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் எஸ் பி முத்துராமன் ஆவார்.

நவரச நாயகன் கார்த்திக் தனி ரசிகர் கூட்டமே இருந்தது. அதிலும் குறிப்பாக இவருக்கு ஏராளமான பெண் ரசிகர்கள் இருந்தனர் வெற்றிகரமாக சினிமா வாழ்க்கையை துவக்கிய கார்த்திக் தன்னுடைய நடவடிக்கைகளால்  பட வாய்ப்புகளை இழக்கத் தொடங்கினார்.

ஒவ்வொரு நடிகருக்கும் தங்களது வாழ்வில் ஏற்ற இரக்கம் வருவது போல் 1981 ஆம் ஆண்டு வெற்றிகரமாக தொடங்கிய இவரது சினிமா வாழ்க்கை ஐந்தாண்டுகளுக்குப் பிறகு மெல்ல சரியத் தொடங்கியது. பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் கார்த்திக் இருந்த நேரத்தில்  புதிய இயக்குனர் ஒருவர் அவரை சந்தித்து கதை சொல்லி இருக்கிறார்.

அந்தக் கதையைக் கேட்ட கார்த்திக் இதெல்லாம் தனக்கு செட் ஆகாது என்றும்  தான் நடித்தால் இரவாகத்தான் நடிப்பேன் எனவும் கரராக கூறிவிட்டார். ஆனாலும் மனம் தளராத அந்தப் புதிய இயக்குனர் கார்த்திக்கை சம்மதிக்க வைத்து அந்தத் திரைப்படத்தையும் எடுத்து முடித்தார். அந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. மோகன் ரேவதி மற்றும் கார்த்திக் நடிப்பில் வெளியான மௌன ராகம் திரைப்படம் தான் அது. அந்தப் புதுமுக இயக்குனர் தான் மணிரத்தினம். இன்று வரை மக்களால் பேசப்படும் மௌன ராகம் திரைப்படம் கார்த்திக்கின் சினிமா கிரியேரில் மிகப்பெரிய ஒரு மாற்றத்தை கொண்டு வந்தது எனலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

an interesting fact about karthik block buster movie


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->