ஓணானை எடுத்து வேட்டியில் விட்ட தல - தளபதி உயிர் ரசிகர்கள்.. பல்பு வாங்கிய சோகங்கள்.!! - Seithipunal
Seithipunal


அதிமுக என்ற பெயரில் அஜித் திராவிட முன்னேற்ற கழகம் என்று பெயர் சூட்டி., இக்கட்சியின் சற்பக்க மதுரை மாநகரத்தின் மேயர் பதவிக்கு போட்டியிடுவதாக போஸ்டர் தயார் செய்து ரைட் சுரேஷ் என்ற வாலிபர் இணையத்தில் பரப்பி பெரும் பிரச்சனையை வளர்த்துள்ளார்.

சொந்தமாக போஸ்டர் டிசைன் தொழில் செய்து வரும் சுரேஷ்., தனது சுய விளம்பரத்திற்க்காக விபரீத விளையாட்டை தேர்வு செய்ய., இது ரசிகர்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்பட்டு வரும் அஜித்திற்கு மட்டுமல்லாது., அஜித்தின் மீது அன்பு கொண்ட அனைவரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் அஜித் ரசிகர்களே ரைட் சுரேஷை திட்டி தீர்த்த நிலையில்., இதற்கு தனது பகிரங்க மன்னிப்பையும் ரைட் சுரேஷ் கேட்டுள்ளார். இந்த நிலையில்., நீங்கள் மட்டும் தான் இவ்வாறு செய்வீர்களா? என்பதை போல மதுரையை சார்ந்த விஜய் ரசிகர் கில்லி சிவா செய்ததும் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது.

ajith dravida munetra kalagam, ajith fan madurai poster, vijay fan madurai poster,

வரும் 2021 ஆம் வருடத்தில் மக்களுக்காக நிகழப்போகும் அதிசியம் என்ற தலைப்பில்., நடுவில் விஜய்யும் மற்ற இரண்டு புறத்திலும் ரஜினி - கமல் புகைப்படத்தை வைத்து சுவரொட்டி தயாரித்து., ஏக்கத்துடன் மக்கள்... எதிர்பார்ப்பில் நாங்கள் என்ற கருத்தையும் தெரிவித்து சர்ச்சை பதிவு செய்துள்ளார். 

பல ரசிகர்கள் நடிகர்கள் சொல்வதை கேட்டு தற்போது அமைதிகாத்து வரும் நிலையில்., தேரை இழுத்து தெருவில் விட்டு., ஓணானை பிடித்து வேட்டியில் விட்டு விளையாடும் சில ரசிகர்களும்., பின்னர் ஓணானால் பாதிப்பு ஏற்படும் போது கதறுவதும் தொடர்ந்து வருகிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ajith vijay fans poster problem


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->