"அட்டகத்தி" பட நடிகைக்கு அரிய வகை நோய்!! ரசிகர்கள் அதிர்ச்சி.!! - Seithipunal
Seithipunal


புரட்சி இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான "அட்டக்கத்தி" படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை நந்திதா ஸ்வேதா. அதனைத் தொடர்ந்து அவர் சிவகார்த்திகேயனுடன் எதிர்நீச்சல், விஜய் சேதுபதியுடன் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, விஷ்ணு விஷாலுடன் முண்டாசுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் சமீபகாலமாக அவர் தமிழ் திரைப்படங்களில் நடிப்பதில்லை.

இதற்கு காரணம் தசை அழிவு நோயால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக அவரே தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய நடிகை நந்திதா "பைரோமியால்ஜியா எனும் அரிய வகை தசை அழிவு நோயால் நான் பாதிக்கப்பட்டுள்ளேன். இந்த நோயால் என் உடல் எடை வெகுவாக குறைந்துள்ளது. 

சிறிய வேலை செய்தாலும் கூட என்னுடைய தசைகளில் பிரச்சனை ஏற்படுத்தும். இதனால் வேலையும் உடற்பயிற்சியும் என்னால் செய்ய முடியாது. சில நேரங்களில் நகர்வதற்கு கூட கடுமையாக இருக்கும். நினைவாற்றலையும் பாதிக்கும் மோசமான சூழலும் ஏற்படும். இத்தனை கஷ்டங்களையும் தாண்டி என்னுடைய அடுத்த படத்திற்காக உழைத்துக் கொண்டு இருக்கிறேன்" என தெரிவித்துள்ளார். நடிகை நந்திதா அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டது குறித்து அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actress Nandita suffers from fibromyalgia


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->